செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 5 மே 2021 (20:15 IST)

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் தேதி: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை மறுநாள் முதல்வராக பதவியேற்க உள்ளார்
 
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழகம் மட்டுமே அக்கட்சிக்கு ஆறுதலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 7-ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் என அக்கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்கு தேர்தலில் வெற்றிபெற்ற 18 எம்எல்ஏக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்