1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 28 ஜனவரி 2024 (12:51 IST)

21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்த காங்கிரஸ்.. 4ல் இருந்து ஆரம்பிக்க இருக்கும் திமுக..!

dmk congress
திமுக கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் கொடுக்க இருப்பதாகவும் அதில் 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த பேச்சு வார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சு வார்த்தையின் போது 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலையை இன்று மாலை திமுகவுடன் காங்கிரஸ் ஒப்படைக்க இருப்பதாகவும் அதில் விருப்பத்தொகுதிகள் பட்டியலில் இருந்து 14 தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் கோரிக்கை விடுப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் கடந்த தேர்தலில் 10  தொகுதிகள் கொடுத்த திமுக இந்த முறை நான்கு தொகுதிகள் மட்டுமே கொடுக்க இருப்பதாகவும்  அதனால் பேச்சுவார்த்தை எப்படி நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன
 
Edited by Mahendran