தொடர்புடைய செய்திகள்
- நீலகிரி தொகுதி கிடைக்காததால் திட்டமிட்டு பேசுகிறாரா ஆ ராசா.. பிரபல பத்திரிகையாளர் சந்தேகம்..
- தமிழை அடுத்து ஆங்கிலம்.. பொதுத்தேர்வு எழுத வராத 12,000 மாணவர்கள்..
- தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப் புரட்சி.. முதல்வர் ஸ்டாலின் பதிவு..!
- வெற்றிமாறனின் விடுதலை 2 இந்த ஆண்டு ரிலீஸ் ஆகாதா?
- ராகுல் காந்தி ஆணவம் இன்னும் மாறவே இல்லை.. ஸ்மிருதி இரானி ஆவேசம்..!
ராமர் குறித்த ஆ.ராசா கருத்தில் எங்களுக்கு 100 சதவீதம் உடன்படவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு
இந்து கடவுள் ராமர் குறித்து திமுக எம்பி ஆ.ராசா கூறிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
சமீபத்தில் நடந்த திமுக கூட்டம் ஒன்றில் பேசிய ஆ ராசா இந்தியா என்பது ஒரு நாடே இல்லை என்றும் அது ஒரு துணை கண்டம் என்றும் ஒரே மொழி ஒரே பாரம்பரியம் ஒரே கலாச்சாரம் போன்ற பண்புகள் இருந்தால் மட்டுமே அது நாடு என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் நாங்கள் ராமருக்கு எதிரானவர் என்று சுய பிரகடனம் செய்வதாக கூறிய ஆ.ராசா ராமர் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா நாங்கள் 100% ஆ.ராசா கருத்துடன் உடன்படவில்லை, அவருடைய கருத்தை கண்டிக்கிறோம், ராமர் அனைவருக்கும் பொதுவானவர், அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நாங்கள் நம்புகிறோம்
ராமர் சமூகம்ம் ஜாதிம் மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று நாங்கள் நம்புகிறோம் ராமர் என்பது வாழ்க்கைக்கான லட்சியம் ராமர் என்பது கண்ணியம் ராமர் என்பது நீதி ராமர் என்பது அன்பு என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Edited by Siva
