1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 30 ஜூலை 2022 (16:37 IST)

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி தொடரும்: முதல்வர் ஸ்டாலின்

stalin rahul
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடரும் என திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
 
கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் முக ஸ்டாலின் பேசினார்
 
அதில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி தொடரும் என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலில் இதே கூட்டணி தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்
 
இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியடைந்த நிலையில் திமுக உடனான கூட்டணியினால் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஓரளவு வெற்றி பெற்று வருகிறது என்றும் காங்கிரஸ் கட்சியை திமுக கட்டிவிட்டால் தமிழகத்திலும் காங்கிரஸ் ஜீரோவாகி விடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது