வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (15:06 IST)

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து!

vijayy
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவர் விஜய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
 
அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.  இப்பொதுத்தேர்வு இன்று முதல் வரும் மார்ச் 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
 
முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 7534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள்,21875  தனித்தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறைக் கைதிகள் என் மொத்தம் 7.94 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் கூறினர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவர் விஜய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதில், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொடர் வாழ்த்துகள் ''என்று தெரிவித்துள்ளார்.