ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 1 மார்ச் 2024 (11:20 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் இன்று திமுகவினரால் பிரமாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அவருக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் தலைவர்களும் கமல்ஹாசன் உள்பட திரை உலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
அந்த வகையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.முக ஸ்டாலின்  அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
திமுகவை எதிர்த்து தான் நடிகர் விஜய் அரசியல் செய்ய இருக்கும் நிலையில் அரசியல் நாகரிகம் கருதி அவர் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 
Edited by Mahendran