திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 28 பிப்ரவரி 2018 (11:52 IST)

சென்னையில் கண்டக்டர்கள் இனி உட்கார்ந்து கொண்டு டிக்கெட் வழங்கக் கூடாது; அதிகாரிகளின் அதிரடி எச்சரிக்கை

பேருந்தில் கண்டக்டர்கள் பயணிகளுக்கு, உட்கார்ந்த இடத்திலிருந்து டிக்கட் வழங்காமல், அவர்கள் இடத்திற்கு சென்று டிக்கட் வழங்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சென்னையில் மாநகர பேருந்துகளில் பெரும்பாலான கண்டக்டர்கள், உட்கார்ந்த இடத்திலிருந்தே பயணச் சீட்டை வழங்குவர். இதனால் மக்களுக்கு கடும் சிரமம் ஆளாகியது. மேலும் இதனால் பயணிகள் பலர் பேருந்தில் டிக்கட் எடுக்காமலேயே பயண செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துறைக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் இந்த பிரச்சனையை தடுக்கும் விதமாக, இனி பேருந்துகளில் கண்டக்டர்கள் உட்கார்ந்து கொண்டு டிக்கெட் வழங்கக்கூடாது என்றும் பயணிகளை தேடி சென்று டிக்கெட் வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை மீறுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.