புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...
தவெக தலைவர் விஜய் டிசம்பர் 5ம் தேதியான நேற்று சேலத்தில் மக்களை சந்திக்க அனுமதி கேட்டார். ஆனால் கரூர் சம்பவம் காரணத்தால் போலீசார் அனுமதி மறுக்க அதே தேதியில் புதுச்சேரியில் ரோட் ஷோ நடத்த திட்டமிட்டார். ஆனால் அங்கும் போலீசார் அனுமதிக்க வில்லை.
.
இது தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய தவெக நிர்வாகிகள் புதுச்சேரி முதலவர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசினார்கள். ஆனால், ரோட் ஷோவுக்கு அனுமதி கொடுக்க மறுத்த காவல்துறை பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம் என அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில், வருகிற 9ம் தேதி புதுச்சேரியில் உப்பளம் ஹெலிபேட் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
எனவே அதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையினர் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். பொதுக்கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை.
பொதுக் கூட்டத்திற்கு வருபவர்கள் QR Code முறையில் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். 5000 பேரை 10 கேபின்களாக பிரித்து ஒரு கேபினுக்கு 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மக்களுக்கு குடிநீர் வசதி போன்றவர்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகளை புதுச்சேரி காவல்துறையினர் விதித்திருக்கிறார்கள்.