திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 26 மே 2016 (15:14 IST)

தப்புவாரா யுவராஜ்? - நிபந்தனை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

கோகுல் ராஜ் மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த யுவராஜுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனால், இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்
 
தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவகத்தில் சரண் அடைந்தார். இதனால்,  நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிபிசிஐடி போலீலார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
பின்பு 19ஆம் தேதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது நீதிமன்றம்.  திருநெல்வேலி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.