செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (13:26 IST)

தீபாவளிக்கு முன்னும் பின்னும் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்..!

தீபாவளிக்கு முன்னும் பின்னும் மூன்று நாட்கள் மது கடைகளை மூட வேண்டும் என்றும் 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் 500 மது கடைகள் மூடப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளில் 600 மனமகிழ் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கம் மது கடைகளை மூடி, இன்னொரு பக்கம் மனமகிழ் மன்றங்களை திறப்பது தவறானது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
மொத்தம் 1500 மனமகிழ் மன்றங்கள், முந்தைய ஆட்சியோடு சேர்ந்து தற்போது இயங்கிக் கொண்டிருப்பதாகவும், மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்பது ஏமாற்று வேலை என்றும் அவர் கூறினார். 
 
தீபாவளிக்கு கடந்த ஆண்டு 467 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட 20 சதவீதம் அதிகமாக மது விற்பனை செய்ய வேண்டும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குற்றம் சாட்டினார். 
 
தீபாவளிக்கு முன்னும் பின்னும் மூன்று நாட்களுக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும், 1500 மனமகிழ் மன்றங்களின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
எஃப் எல் 2 என்ற பெயரில் அரசின் உரிமை பெற்றால் யார் வேண்டுமானாலும் மது விற்பனை செய்யலாம் என்ற சலுகைகளை திமுக அரசு வழங்கி உள்ளது என்றும், இது தான் மதுக்கடைகளை குறைக்கும் லட்சணமா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
மனமகிழ் மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மது விநியோகம் செய்ய வேண்டும் என்ற விதி காற்றில் பறக்க விடப்பட்டதாகவும், வெட்டிக்கடைகள் வைக்க வசதி இல்லாத இடத்தில் கூட மணமகள் மன்றங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
 
 
Edited by Mahendran