புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (11:17 IST)

கலைமாமணி விருது யார் யாருக்கு? வெளியான முழு பட்டியல்!

தமிழக அரசின் கலைமாமணி விருது பல்வேறு துறையினருக்கு வழங்கப்படும் நிலையில் 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

 
இதில், பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், ராமராஜன், பின்னணி பாடகி ஜமுனா ராணி, யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, டிவி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், டிவி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
இசையமைப்பாளர்கள் டி.இமான், தீனா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப் பயிற்சியாளர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.