புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:24 IST)

பிரபல நடிகருக்கு ரசிகர்களின் போஸ்டர்….விவேக் டுவீட்

மக்கள் பொதுவாக தங்கள் வீட்டு விஷேங்கள், பண்டிகைகள், விழாக்கள்,அரசியல் நிகழ்வுகளுக்கு எல்லாம் போஸ்டர் ஒட்டுவது வழக்கம். அதேபோல் சினிமா நடிகர்களின் படங்கள் ரிலீஸ்,  பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் இவ்வாறு நோட்டீஸ், மற்றும் போஸ்டர் அடித்து ஒட்டுவார்கள்.

அந்த வகையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சென்னை வடபழனியில் உள்ள ஒருபகுதியில் வழிகாட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த பலகையில் தலைவனே என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டி வாழ்த்தியுள்ளனர்.

இதை ஒருவர் படம் பிடித்து இதுகுறித்து ஒரு டூவிட் பதிவிட்டு,அதை காமெடி நடிகர் விவேக்கிற்கு டூவீட் செய்தார்.

இதைப் பார்த்தை நடிகர் விவேக், ஆர்வமிகுதியால் இவ்வாறு செய்துவிடுகிறார்கள்!! சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல எனப் பதிவிட்டுள்ளார்.