1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (08:03 IST)

தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? கருத்து கணிப்பு வெளியானது!!

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என  டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வருமாறு... 
 
திமுக கூட்டணி 158 இடங்களையும், அதிமுக கூட்டணி 65 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், மக்கள் நீதி மய்யம் 5 இடங்களையும், அமமுக 3 இடங்களையும், இதரக் கட்சிகள் 3 இடங்களையும் கைப்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது.