செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (18:33 IST)

வணிகவியல் டிப்ளமோ படித்தால் நேரடி பி.காம் 2ஆம் ஆண்டு: கல்லூரி இயக்ககம் உத்தரவு!

college students
வணிகவியல் டிப்ளமோ படித்த மாணவர்கள் பி காம் இரண்டாம் ஆண்டு நேரடியாக சேரலாம் என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்க்க முடியாது என கல்லூரிகள் கூறக்கூடது என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது
 
கல்லூரிகளில் தற்போது விறுவிறுப்பாக மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் வணிகவியல் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்திருந்தது
 
ஆனால் ஒரு சில கலை அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது 
 
இது குறித்த செய்தி வெளியான நிலையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் வணிகவியல் டிப்ளமோ படித்த மாணவர்களை நேரடியாக பிகாம் இரண்டாம் ஆண்டில் சேர்க்க மறுக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது