செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (07:56 IST)

இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்த மாவட்டத்தில்?

schools
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி வருகின்றன என்று பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இன்றும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
 
எனவே பள்ளி கல்லூரி மாணவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை மீறி பள்ளிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.