1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 19 மார்ச் 2020 (08:10 IST)

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மரணம்: நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்றபோது விபரீதம்

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி திடீர் மரணம்
லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட பெண் அதிகாரி ஒருவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கரூரில் லஞ்ச புகார் காரணமாக க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி ராணி என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை நேற்று போலீசார் நீதிபதி முன் ஆஜர் படுத்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது
 
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\\
 
லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டதாக பெண் அதிகாரி ஜெயந்தி ராணி, மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்ட ஒருவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு அதன் பின்னர் மரணமடைந்தது கரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது