புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (08:21 IST)

உலகை உலுக்கிய குழந்தையின் மரணம் – குற்றவாளிகளுக்கு 125 ஆண்டு சிறை !

சிரியாவில் இருந்து அகதிகளாக படகில் சென்று விபத்துக்குள்ளாகி உயிரிழந்த குழந்தையின் மரணத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அந்நாட்டு மக்கள் பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் முறையின்றி படகுகளில் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் படகுகள் சமயங்களில் விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 வயது ஆண் குழந்தையான அய்லான் குர்தி உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். இதில் சிறுவன் அய்லான் உயிரிழந்து கடற்கரையில் கிடக்கும் புகைப்படம் உலகையே உலுக்கியது.

இதையடுத்து இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர்கள் மேலான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இப்போது அவர்கள் மூவருக்கும் 125 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.