1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. college student throw petrol bomb at Trichy

போதையில் மாணவர்கள்.. கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு..!

Bomb
போதையில் இருந்த மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி வாசலிலேயே பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் திருச்சி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் என்ற பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவரை கல்லூரி ஆசிரியர் ஒருவர் கண்டித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து கோபமான அந்த மாணவர் வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற நிலையில் மது அருந்திவிட்டு வந்து திரும்பவும் பேராசிரியரிடம் வாக்குவாதம் செய்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பேராசிரியர் அந்த மாணவரை கண்டித்த நிலையில் அவருடைய அடையாள அட்டையையும் வாங்கி வைத்துக்கொண்டார். இந்த நிலையில் மது போதையில் இருந்த அந்த மாணவர் அன்று இரவு தனது சக நண்பர்களுடன் வந்து கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் கல்லூரி வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய மாணவன் பவித்ரன் மற்றும் அவருடைய நண்பர்கள் கபிலன், பிரதீஷ், ஜீவா ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
விருப்ப பாடத்தில் 35 மதிப்பெண்கள் கட்டாயம்: அடுத்த கல்வியாண்டு முதல் அமல்..!