புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (10:12 IST)

கிராம நிர்வாக அலுவலகர்களை கிழித்து தொங்கவிட்ட கலெக்டர்; வைரலாகும் ஆடியோ பதிவு!!

முறையாக அலுவலகங்களில் இல்லாத கிராம நிர்வாக அலுவலகர்களை திருநெல்வேலி கலெக்டர் திட்டும் ஆடியோ பதிவி வைரலாகி வருகிறது.
 
மத்திய அரசு விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கிராம நிர்வாக அலுவலகர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
இந்நிலையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்க சென்றால் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களே இல்லை என திருநெல்வேலியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 
 
இந்த விஷயம் கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷின் கவனத்திற்கு செல்லவே, உடனடியாக ஒரு ஆடியோ பதிவை விஏஓக்களுக்கு அனுப்பினார். அதில் விண்ணப்பங்களை வாங்க கூட உங்களால் முடியாதா? நான் ஒவ்வொரு கிராமமாக இதுகுறித்து சோதனை செய்ய வருவேன். ஒருவேளை நீங்கள் அலுவலகங்களில் இல்லை என்றால் உடனடியாக நீங்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என அதிரடியாக பேசியுள்ளார். அவர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. மேலும் அந்த கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

இது திருநெல்வேலியில் மட்டுமல்ல பெரும்பாலான இடங்களில் இதே கொடுமை தான் நடக்கிறது. அவர்கள் என்னவோ எஜமானர்கள் மாதிரியும், நாம் என்னவோ வேலையாட்கள் மாதிரியும் சீன் போடுவார்கள்.