1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 28 ஜனவரி 2019 (21:18 IST)

யூடியூப் ரிவ்யூ கொடுக்க காசு கேட்டு மிரட்டல்: ப்ளூ சட்டை மாறன் மீது புகார்!

பிரபுதேவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான படம் சார்லி சாப்ளின் 2. இந்த படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
சார்லி சாப்ளின் 2 படம் வெளியான மறுநாள் யூடியூப்பில் ரிவ்யூ கொடுத்துள்ளார் ப்ளூசட்டை மாறன் (தமிழ் டாக்கீஸ் இளமாறன்). இவர் இந்த படத்திற்கு மோசமான விமர்சனத்தை கொடுத்துள்ளார். இந்த படம் மற்றுமின்றி பல படங்களுக்கு இது போன்ற நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து பிரபலமானவர். 
 
இந்நிலையில் ப்ளுசட்டை மாறன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சார்லி சாப்ளின் 2 படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். அந்த புகாரில் படத்திற்கு விளம்பரம் செய்யவும், விமர்சனம் அளிக்கவும் பணம் கேட்டு மிரட்டினார் ப்ளுசட்டை மாறன். ஆனால், படக்குழு பணத்தை தரமறுத்ததால் சார்லி சாப்ளின் 2 படத்தை மிக மிக் தரக்குறைவான வகையிலும் ஒருமையிலும் பேசி விமர்சனம் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புகார் தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷக்தி சிதம்பரத்தின் புகார் புகைப்படம் பின்வருமாறு...