திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (11:21 IST)

ஆன்லைன் சூதாட்டத்தால் தொடரும் தற்கொலை! – தடை செய்யப்படுமா ரம்மி?

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் தொடர்ந்து பலர் தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது கோவையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக ஆன்லைன் சூதாட்டங்களினால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த மதன்குமார் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மி மோகத்தால் பல இடங்களில் கடன் வாங்கி பணத்தை இழந்துள்ளார். இதனால் மன விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கடந்த 10 நாட்களில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டது போல ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.