திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (13:16 IST)

திருடிய பைக்குடன் ஓனரிடமே வந்து டைம் கேட்ட திருடன்! – கோவையில் நூதன சம்பவம்!

கோவையில் பைக்கை திருடிய திருடன் பைக் உரிமையாளரிடமே வந்து டைம் கேட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

பல பகுதிகளிலும் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சில சந்தர்ப்பங்களில் திருடர்கள் அஜாக்கிரதையாக மாட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன.

கோவை மாவட்டம் சூலூரில் முருகன் என்பவர் தனது வீட்டின் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். காலையில் பார்த்தபோது அந்த இடத்தில் இருசக்கர வாகனம் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் உடனடியாக புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளார்.

அப்போது வழியில் இருசக்கர வாகனத்தில் பாலசுப்பிரமணியம் என்பவர் வந்துள்ளார். அவர் முருகனை நிறுத்தி பைக் ரிப்பேர் கடை எப்போது திறப்பார்கள் என கேட்டுள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் ஓட்டி வந்த பைக் தன்னுடையது என்பதை உணர்ந்த முருகன் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து பாலசுப்ரமணியனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளார். பின்னர் போலீஸார் பாலசுப்பிரமணியத்தை கைது செய்துள்ளனர்.

பைக்கை திருடிவிட்டு அதன் உரிமையாளரிடமே வந்து ரிப்பேட் கடை திறக்கும் கடை குறித்து விசாரித்த திருடனின் செயல் பலரையும் நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.