வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 நவம்பர் 2025 (15:45 IST)

கோவை, மதுரை மெட்ரோ: 2026 ஜூன் மாதத்திற்குள் திட்டம் வரும் - நயினார் நாகேந்திரன் உறுதி!

nainar nagendran
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள்  2026 ஜூன் மாதத்திற்குள் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 
திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் புழக்கம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து பேசினார். மேலும் தமிழகம் தற்கொலையின் தலைநகரமாக மாறி வருவதாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் மீது நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக சாடினார்.
 
கோவை மற்றும் மதுரை மெட்ரோவில், சாலைப் போக்குவரத்தைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டுமே பயண நேரம் குறையும் என்று தமிழக அரசே மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் திட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, தமிழக அரசு வேண்டுமென்றே தவறான அறிக்கையை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது என்று நான் பகிரங்கமா கூறுகிறேன்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
 
மெட்ரோ ரயில் திட்டம் முழுவதுமாக நிராகரிக்கப்படவில்லை. மத்திய அரசின் சில திருத்தங்களுக்காக திட்ட அறிக்கை திருப்பி மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
 
 
Edited by Mahendran