வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , வெள்ளி, 3 மே 2024 (14:33 IST)

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்- இந்திய ஒற்றுமை இயக்கம் மனு.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 
 
பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர்,இந்தியா கூட்டணி தலைவர்கள்  எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை இஸ்லாமியர்களுக்கு தான் உள்ளது என்று சொன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி திரித்து மதவெறிப்பு பிரச்சாரத்தை செய்துள்ளதாகவும் இது போன்ற பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும் சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும் அமைதியை சீர்குலைப்பதாகவும் கூறியுள்ள இந்திய ஒற்றுமை இயக்கத்தினர், தேர்தல் ஆணையம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் எனவும் தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி யிடம் மனு அளித்தனர்.
 
இந்த மனு இவ்வியக்கத்தின்  கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேருதாஸ், பேராசிரியர் காமராஜ், டென்னிஸ் கோவில்பிள்ளை ஆகியோர் அளித்தனர்.