குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.. உள்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!
குற்றவியல் திருத்த சட்டங்களை அமல்படுத்துவதில் மாநில அரசுகளின் கருத்தினை கேட்க வேண்டும் என்றும், அதுவரை புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் குற்றவியல் சட்டங்களுக்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் கிரிமினல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், 3 சட்டங்களிலும் அடிப்படையில் தவறுகள் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாமற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம்ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களும் கடந்தஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 1-ம் தேதி முதல் 3 புதிய சட்டங்களும் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக முதல்வர் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Edited by Mahendran