1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (16:28 IST)

திராவிட இயக்கத்தின் போர்வாள்: வைகோவுக்கு முதல்வர் வாழ்த்து!

திராவிட இயக்கத்தின் போர்வாள் என வைகோ தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
மேலும் இந்தியா முழுவதிலுமிருந்து அரசியல் தலைவர்களிடமிருந்து வைகோவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது
 
திராவிட இயக்கத்தின் போர்வாளாகவும் - நாடாளுமன்றத்தில் தனது விவாதங்களால் நடுங்க வைக்கும் அனலாகவும் - கொண்ட கொள்கைக்காக இடைவிடாத போராளியாகவும் வலம்வரும் என் ஆருயிர்ச் சகோதரர் வைகோ அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
 
அவரது சொல்லும் செயலும் நூறாண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்!