1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (09:07 IST)

மகளிருக்கு மாதம் ரூ.1000.. முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை..!

மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில் இரண்டு வருடம் ஆகியும் இன்னும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. 
 
இதனை அடுத்து சமீபத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 என்ற திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில் இருந்து அமல் படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் நிதி அமைச்சர், நிதித்துறை செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மகளிர்க்கு மாதம் ரூ.1000 வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்த இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் மகளிர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva