1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (20:59 IST)

இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின் டுவிட்

மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசியல் கட்சிகள் விடுத்து வந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் சமூக நீதியைக் காக்கும் உறுதியான போராட்டத்தை திமுகவும் இந்த அரசும் தொடர்ந்து நடத்தும் என்றும் சமூக நீதியை மக்கள் நீதி என்றும் தெரிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது
 
மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்; குறிப்பாக திமுகவின் சமூகநீதிப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என கூறியுள்ளார்.