வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (10:01 IST)

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது: முதல்வர், உதயநிதியின் பரிசு என்ன தெரியுமா?

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த மாடுகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் சிறந்த காளையின் சொந்தக்காரருக்கு சொகுசு கார் பரிசு அளிக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதேபோல் சிறந்த மாடுபிடி வீரர் ஒருவருக்கு கார் ஒன்று பரிசு அளிக்கப்படும் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது
 
அதுமட்டுமின்றி இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் அனைத்து மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் தங்க காசுகள் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு தற்போது கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சி பல தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பாக ஒளிபரப்பாகும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது