செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (16:53 IST)

அம்மா உணவகம் மூடப்படுமா? சட்டமன்றத்தில் முதல்வர் பதில்!

அம்மா உணவகம் மூடப்படுமா என்ற கேள்விக்கே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் பதிலளித்துள்ளார்.
 
மதுரை உள்பட ஒருசில இடங்களில் அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்பட்டு வருவதாகவும் கலைஞர் கருணாநிதி புகைப்படத்தை அம்மா உணவகத்தில் பெயர்ப்பலகையில் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன 
 
மேலும் ஒருசில அம்மா உணவகங்களில் போதுமான உணவு பொருட்கள் வாங்குவதற்கு நிதி உதவி செய்யவில்லை என்றும் அம்மா உணவகத்தில் பணி புரிபவர்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன
 
இதை அடுத்து அம்மா உணவகம் விரைவில் மூடப்படுகிறதா என்ற கேள்வி இன்று சட்டமன்றத்தில் எழுதப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அம்மா உணவகம் எதுவும் மூடப்பட கூடாது என்பதே என் எண்ணம் என்றும் அதில் கடைசி வரை உறுதியாக இருப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.