வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (11:21 IST)

தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. மகளிர் உரிமைத் தொகை குறித்தா?

MK Stalin
சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில திட்டக்குழு தலைவர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாகவும், மேலும் சில அதிகாரிகள் பங்கேற்று உள்ளதாகவும் தெரிகிறது.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக்குழு கூட்டம் நடைபெற்று வரும் இதில் காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
 
Edited by Mahendran