1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (11:28 IST)

கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் விசாரணை: 15 பேருக்கு விருது வழங்கும் முதல்வர்

cm stalin
கோவை கார் சிலிண்டர் வெடிகுண்டு சம்பவத்தில் சிறப்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விருது வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
கோவை கார் வெடி குண்டு வெடிப்பு சம்பவத்தில் திறம்பட செயல்பட்ட உளவுப்பிரிவு, சைபர் கிரைம், க்ரைம் பிராஞ்ச் காவல்துறையினருக்கு 15 பேருக்கு முதலமைச்சரின் விருது வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
 
கோவை கால் வெடிப்பு சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது
 
ஒரு பக்கம் இந்த சம்பவம் காவல்துறை குறித்து பாஜக கடும் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் காவல்துறைக்கு தமிழக முதல்வர் விருது வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran