செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 21 ஆகஸ்ட் 2021 (15:33 IST)

என்னை பொறாமைப்படவைக்கும் என் மகனே.... மகனுக்கு வாழ்த்து சொன்ன மாதவன்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தில் அறிமுகம் ஆனவர் மாதவன். இவர் ரன், எதிரி, விக்ரம் வேதா, மாறா உள்ளிட்ட படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தார். இவருக்கு தமிழைப் போலவே இந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
 
இவர் 1999ல் சரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் மகனின் 16 வது பிறந்தாளுக்கு வாழ்த்துக்கூறியுள்ள மாதவன் மகனின் தோழன் போன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, நான் நன்றாக இருக்கும் எல்லாவற்றிலும் என்னை முந்தி பொறாமைப்படுத்தியதற்கு நன்றி, என் இதயம் பெருமிதம் கொள்கிறது. 
 
நான் உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என் மகனே. நீ ஆண்மையின் வாசலில் நுழைந்தவுடன், நான் உங்களுக்கு 16 வது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களுக்கு வழங்குவதை விட இந்த உலகத்தை நீங்கள் சிறந்த இடமாக மாற்ற முடியும் என்று நம்புகிறேன். நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தந்தை என கூறி மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.