திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (00:06 IST)

முதல்வரையே மிரட்டி உள்ளனர்; அனைத்துமே மர்மமாக இருக்கிறது: ஸ்டாலின்

முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


 


முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து 40 நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், ‘என்னை கட்டாயப்படுத்தியதால் தான் ராஜினாமா செய்தேன்’ எனக் கூறினார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ”முதல்வரையே மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சாசனப்படி உரிய ஆட்சியை ஆளுநர் அமைக்க வேண்டும்.
 
இந்த ஆட்சியில் அனைத்துமே மர்மமாக இருகிறது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை சசிகலா செயல்படவே விடவில்லை. பன்னீர் செல்வம் தலைமையில் அமைந்துள்ள ஆட்சி நடைபெற்ற மக்கள் நல பணிகளை ஆதரித்தோம்.
 
ஸ்டாலின் நிலைமையை கூர்ந்து கவனிக்கிறோம். அதிமுக தொண்டர்கள் கருத்தை பன்னீர்செல்வம் பிரதிபலித்துள்ளார். மக்களுக்கு ஆதரவான பணிகளுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும். திமுக எதிர்க்கட்சியாக தான் செயல்படும். எதிரி கட்சியாக செயல்படாது” என்று தெரிவித்துள்ளார்.