ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (15:55 IST)

கூட்டுறவு வங்கியில் கடன் நிறுத்தப்படவில்லை! – எடப்பாடியார் விளக்கம்!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் முதலமைச்சர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைகளுக்கு வழங்கப்பட்டு வரும் கடன் தொகை நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் “கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்குவதை நிறுத்த சொல்லி அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இப்படி ஒரு தகவல் எப்படி பரவியது என தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ”கூட்டுறவு வங்கிகள் உட்பட எந்த வங்கியிலும் கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கவில்லை. வங்கியில் உள்ள பண இருப்பின் கணக்கில் கடன் தொகை வழங்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டது” என விளக்கம் அளித்துள்ளார்.