10,11 ஆம் வகுப்பு : தனித்தேர்வர்கள் ஆல்பாஸ்- முதல்வர் அறிவிப்பு
10, 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகளைத் தனித்தேர்வுகளாக எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 மற்றும் 11 ஆம் வகுப்புத் துணைத்தேர்வுகள் தனித்தேர்வர்களுக்காக இம்மாதம் நடைபெற இருந்தது. இந்நிலையில், கொரொனா தொற்று 2 அலையாகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இதில் இருந்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விலக்கு அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின்:, தனித்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.