வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 10 பிப்ரவரி 2024 (15:01 IST)

மக்களவை தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்: அமித்ஷா திட்டவட்டம்

Amitshah
மக்களவை தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார் 
 
 
இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கான அறிவிப்பாணை மக்களவை தேர்தலுக்கு முன்பு வெளியிடப்படும் .. யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கான சட்டம் அல்ல, குடியுரிமை திருத்த சட்டம்/
 
"ஜனசங்கம் காலம் முதலே பொது சிவில் சட்டம் பாஜகவின் கொள்கை உள்ளது. அது இந்திய அரசியல் சாசனத்தின் கொள்கையும் கூட. எனவே மதச்சார்பற்ற ஒரு நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
 
Edited by  Mahendran