1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்
Last Updated : சனி, 2 ஜனவரி 2021 (15:12 IST)

வாழ்கையில் வெற்றிப் பாதையைத் தேர்வு செய்திடுங்கள் !!!

எந்தவொரு காரணமுமின்றி நம்மால் எதுவும்செய்ய முடியாத நிலைக்கு நாம் இன்னும் வரவில்லை; காலமும் நேரமும் எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவுசெய்யக்கூடும்; சிலவேளைகளில் எதிராகவும் திரும்பக்கூடும்.

அமெரிக்க நாட்டின் தேசத்தந்தை ஜார்ஜ் வாஷிங்டன் தனது படைகளுடன் எதிரிநாட்டுக்கு எதிராகச் சண்டைபோட்டுகொண்டிருந்தபோது,  கடும்பனியில் உறைபனி ஆற்றை நிரப்பியிருந்தது.

அதை எப்படியும் கடந்தால்தான் வெற்றியென்பதால் நெஞ்சில் துணிவுகொண்டு அந்த ஆற்றைக்கடந்து சென்று போரிட்டு சரித்திர வெற்றி பெற்றார் ஜார்ஜ் வாஷிங்டன்.

ஒருசெயலைச் செய்யும்போது அது முடிவடையும்முன்பே நமக்கு அதுகுறித்தான விமர்சனங்களும், எதிர்வினைகளும் கொசுக்களைபோலவும் ஈத்தேனீக்களைப்போலவும் படையெடுத்துவந்து நம்மைச் செயலையே செய்யவிடாதபடி தாக்கும்! தடைகளை ஏற்படுத்தவே தக்க சமயத்தைப் பார்க்க்த்திருகும்! ஆனா எந்தச் சவாலையும் சமாளிக்கும் நெஞ்சுறுதியுடன் போரிட்டால் நம்மால் முடியாத காரியமில்லை.

ஒருமுறை முன்னாள் அமெரிக்க ஜானதிபதி ஜான் எஃப் கென்னடியை ஒரு சிறுவன் சந்தித்துப் பேசிகொண்டிருந்தார். அப்போது, நீ என்னவாகப் போகிறார் என கென்னடி அச்சிறுவனைப் பார்த்துக் கேட்டார். ’’நான் உங்கள் பதவியை ஒருநாள் அலங்கரிப்பேன்’’ என்று உறுதிபடக்  கூறினான் அச்சிறுவன்.

அதேபோல் சில ஆண்டிகள் கழித்து, யேல் சட்டக்கல்லூரியில் படித்துப் பட்டம்பெற்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டுக் கடந்த 1993 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 42 வது அதிபராகப் பதவிவகித்தார். தான் கொண்ட கனவை அவர் நனவாக்க அவர் இடையயறாது உழைத்தார்.

எனவே நாம் தேர்ந்தெடுக்கும் பாதையென்பது நமது லட்சியத்தை நிறைவேற்ற உதவும் காரணியாகவிருப்பதை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.

சக்கரம் ஒருபுறமும்  வாகனம் ஒருமுறமும் இருந்தால் பயணம் எப்படிச் சிறக்கும்?

நாமும் நமது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டி நமது பாதையைத் தேர்ந்தெடுப்பதொன்றை சேயைக்காக்கும் தாயைப்போல் நமது கடமையாகவே கொள்வோம்.