புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (21:47 IST)

ஏலச்சீட்டு புகார் எதிரொலி: பிரபல நடிகரின் தம்பியிடம் போலீஸ் விசாரணை

ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஏமாற்றி வரும் பலர் குறித்து அவ்வப்போது செய்திகள் இணையதளங்களிலும் செய்தித்தாள்களிலும் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் ஆனந்த்ராஜ் தம்பி அமல்ராஜ் மீது புதுச்சேரி காவல்நிலையத்தில் ஒரு ஏலச்சீட்டு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த ஏலச்சீட்டு புகார் எதிரொலியால் நடிகர் ஆனந்தராஜ் தம்பியிடம் 2 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின்னர் ஏலச்சீட்டு  தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் நாளை எடுத்து வருமாறு அமல்ராஜை போலீசார் அனுப்பி வைத்தனர். 
 
நாளை அமல்ராஜ் எடுத்து வரும் ஆவணங்களை பார்த்த பின்னரே அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றும் அதன்பின்னரே அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய முடியும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.