வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (20:06 IST)

பளார்ன்னு அறைந்த குஷ்புவை பாராட்டிய சின்மயி! ஏன் தெரியுமா?

தேர்தல் பிரசாரத்தின்போது தன்னை தவறாக தொட்ட நபர் ஒருவரை நடிகை குஷ்பு அந்த இடத்திலேயே பலர் முன்னிலையில் அறைந்து தக்க பதிலடி கொடுத்தது வரவேற்கிறேன் என பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.


 
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பினார். தமிழகத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் கிடைக்கும் என்று ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.
 
இருந்தாலும் வருத்தப்படாமல் தமிழகத்தின் சில தொகுதிகளில் பிரசாரம் செய்துவிட்டு மத்திய பெங்களூரில் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷாத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அவரிடம் சில்மிஷம் செய்த நபர் ஒருவரை குஷ்பு அந்த இடத்திலேயே ஓங்கி அறைந்தார்.


 
இந்நிலையில் தன்னிடம் சில்மிசம் செய்தவனுக்கு குஷ்பு அந்த இடத்திலேயே தக்க பதிலடி கொடுத்தது வரவேற்கிறேன் என பிரபல பாடகி சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.