புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:09 IST)

கொரோனா பரவலை சமாளிக்க இந்தியாவுக்கு உதவி! – நேசகரம் நீட்டும் சீனா!

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இவ்விவகாரத்தில் உதவ முன்வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஆக்ஸிஜன், தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்டவையும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்திய நிலைமை குறித்து பேசிய சீன வெளியுறவு துறை அதிகாரி ஒருவர் “கொரோனா உலகத்திற்கே எதிரி. அதை விரட்டியடிக்க வேண்டிய கடமை உலக நாடுகளுக்கு உள்ளது. அதனால் இந்தியாவின் தேவைக்கேற்ப உதவி செய்ய தயார்” என கூறியுள்ளார். முன்னதாக பிரான்ஸ் இந்தியாவிற்கு உதவ முன்வந்த நிலையில் தற்போது சீனாவும் இவ்வாறு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.