புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (16:08 IST)

விஜய் சேதுபதியில் புதிய போட்டோ ஷூட் வைரல்...

நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் எடுத்துக் கொண்ட போட்டோ ஹூட்டிங் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவரது நடிப்பில் ரிலீஸாக க/பெ ரணசிங்கம், விஜயுடன் மாஸ்டர்  உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஸ்ருதிஹாசனுடன் அவர் இணைந்து நடித்துள்ள லாபம் படம் விரைவில் திரைக்கு  வரவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாநகரம் என்ற திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார் . இப்படத்திற்கு மும்பைகார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வரும் இந்த படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் சேதுபதி கேரக்டரின் லுக் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஸ்டைலிஷாக இருப்பதாக ரசிகர்கள்கூறுகின்றனர். இப்புகைப்படம் வைரலானது.

சந்தோஷ் சிவன் நீண்ட நாட்கள் கழித்து இயக்கிவரும் இப்படம் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய்சேதுபதி சமீகத்தில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.

மேலும்,  சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன் படமும் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.