தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம்: தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் சமீபத்தில் பொறுப்பேற்ற காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்
சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உட்பட பல சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்கட்சிகள் மாறி மாறி புகார் செய்து வருகின்றனர்.
மேலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உள்துறை செயலாளராக இருந்த அமுதா உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம், உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம், கொலை, கொள்ளைச் சம்பவங்கள், போதைப் பொருள் நடமாட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர காவல் ஆணையர் உள்பட பல புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran