1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (09:02 IST)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? ரஜினிகாந்த் அளித்த அதிர்ச்சி பதில்..!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு கலந்து கொண்டு சென்னை திரும்பி உள்ள ரஜினிகாந்த் அவர்களிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அவர் கூறிய அதிர்ச்சி பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் மும்பையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் திருமணத்தில் திடீரென அவர் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் திருமணத்தில் கலந்து கொண்டு இன்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நிருபர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அம்பானி வீட்டில் கடைசி திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்றும், அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தை இன்று பார்க்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Edited by Siva