செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (11:15 IST)

இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

இன்று உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்! தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!

கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.