புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (20:19 IST)

ராஜாஜிக்கே தமிழர்களை புரிந்துகொள்ள 25 ஆண்டுகள் ஆனது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ராஜாஜிக்கே  தமிழர்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு 25 ஆண்டுகள் ஆனது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தின் வெப்பம்தான் 2022ஆம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது என்றும் அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது என்று முதல்வர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மொழிப்போர் குறித்து தமிழர்களை புரிந்துகொள்வதற்கு முன்னாள் முதல்வர் ராஜாஜி கே 25 ஆண்டுகள் ஆனது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது