புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 22 ஜனவரி 2022 (12:19 IST)

செம்மொழி சாலை - தமிழின் பெருமையை பேசி சிலிர்த்த முதல்வர் ஸ்டாலின்!

செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 
தமிழக அரசின் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த விருது வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் 2010 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்பட்டது. 
 
விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ், கலைஞர் கருணாநிதி சிலை வழங்கப்பட்டன. இதன் பின்னர் நிழச்சியில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், தமிழ் எந்தமொழியில் இருந்தும் கடன் வாங்கி உருவான கிளை மொழி அல்ல. தமிழில் இருந்துதான் பல மொழிகள் உருவாகின. 
உலகம் முழுவதும் இருக்கக்கூடிய மொழியியல் அறிஞர்கள் தமிழ் தொன்மையான மொழி. பண்பாட்டின் அடையாளமாக தமிழ் மொழி இருக்கிறது. தமிழ் பேசும்போது இனிமையாக உள்ளது. நிலம், மண், பண்பாடு, மக்களுக்கு இலக்கணத்தை வகுத்திருக்கிறது நம் தமிழ் மொழி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர் கலைஞர். 
 
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு என தனியாக கட்டிடம் வேண்டும் என்று கலைஞர் விரும்பினார். பெரும்பாக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு தனி கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். தமிழ் மொழி ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பணியாற்றி வருகிறது. 
 
எனவே செம்மொழி தமிழாய்வு நிறுவனம் உள்ள சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலை செம்மொழி சாலை என அழைக்கப்படும் என அறிவித்துள்ளார்.