1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:58 IST)

உக்ரைன் வாழ் தமிழர்களுக்கு உதவும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

உக்ரைன்  வாழ் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் வழி விரைந்து உதவும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.         
                                                                      

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர்  புதின் போர்தொடுக்க உத்தரிவிட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின்   நுழைந்துள்ள  ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.

இதில், தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந் நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

உலகளப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போராக இது இருக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில்,   உக்ரைன் தலைநகர் கீவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தமிழ் நாட்டு மாணவர்கள் சிக்கித்தவித்துள்ளனர்.

ஏற்கனவே உக்ரைனில் சைபர் தாக்குதால் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதால் மாணவிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின்  உக்ரைன்  வாழ் தமிழர்களுக்கு இந்திய தூதரகம் வழி விரைந்து உதவும்படி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.                                                                               
மேலும், உதவி தேவைப்படும் உக்ரைன் வாழ்  தமிழர்கள்  [email protected]  என்ற இணையதளம் மூலம் தொடர்ப்புகொள்ளல்லாம் என அறிவித்துள்ளார்.