முதல்வர் பழனிசாமி’ கால்களுக்குள் நெளிந்து’ போவார்!” - ஸ்டாலின் ’கிண்டல்’

stalin
சினோஜ் கியான்| Last Updated: சனி, 19 அக்டோபர் 2019 (16:36 IST)
தமிழக அரசியல் களம் இன்றைக்கு பரபரப்புடன் இயங்கிவருகிறது. விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்., 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற  உள்ளது. இதற்கான திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் தொடர்சியாக பிரச்சாரத்தில் ஈட்டுபட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் சென்னை  அப்பொலோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது அதிமுக கட்சிக்கு பெரும் இழப்பாகக் கருதப்பட்டது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும், துணைமுதல்வராக ஓ. பன்னீர் செல்வமும் இருந்து தமிழகத்தை ஆட்சி செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று, அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ரெட்டியார் பட்டி நாராயணனை ஆதரித்து  முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்தார்.
edapadi
அப்போது அவர் கூறியதாவது :
 
தொடுத்த வழக்கின் காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா உயிரிழந்ததற்குக் காரணமே திமுகவும், ஸ்டாலினும்தான் என நான் பகிரங்கமாக கூறுகிறேன்.ஜெயலலிதாவை வசைபாடிய ப. சிதம்பரம் உள்ளிட்டோரை அவரது ஆன்மா பழிவாங்கிவிட்டது. அதேபோல் ஜெயலலிதாவின் ஆன்மா  ஸ்டாலினையும் சும்மா விடாது; நல்லது செய்தால் நல்லது செய்தால் நடக்கும் கெட்டது செய்தால் கெட்டது நடக்கும் ! சட்டசபையில் சட்டையை கிழித்துவிட்டு வரும் ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா ? எனத் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது பிரசாரத்தின் போது கூறியுள்ளதாவது :
stalin
மண்புழு மண்ணிற்குள் நெளிந்துபோகும்; ஆனால் எடப்பாடி கால்களுக்கும் நெளிந்து போவார் என கிண்டல் செய்துள்ளார்.
 
ஏற்கனவே, தன்னை முதல்வர் என்று கூட பார்க்காமல் ஸ்டாலின் பேசிவருவதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 


இதில் மேலும் படிக்கவும் :