சீன் காட்டுகிறார் ஸ்டாலின் – எகிறியடித்த எடப்பாடியார்
”ஸ்டாலின் சீன் காட்டுவதவதற்காக வெள்ளப்பகுதிகளுக்கு சென்று வருகிறார்” என பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழத்தின் மலையோர பகுதிகளான நீலகிரி, உதகமண்டலம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் நீலகிரி பகுதியில் பெய்த கனமழையால் நிலசரிவு ஏற்பட்டு பலர் பலியாகினர். மீட்பு பணிகளுக்கு செல்ல முடியாத அளவுக்கு பல ஊர்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “மீட்பு பணிகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளன. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் வடிந்ததும் அவர்களுக்கு அவரவர் இடங்களிலேயே சேதமடைந்த வீடுகள் சரிச்செய்து தரப்படும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதெல்லாம் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். விளம்பரத்திற்காக வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று சீன் போடுகிறார். ஒரு நாள், இரண்டு நாள் சுற்றி வருவார். பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பார். பிறகு போய்விடுவார். ஆனால் நாங்கள் முழுமையான அக்கறையுடன் மீட்பு பணிகளை செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.